Thursday, January 28, 2010

ஏரோப்லேன் ரெக்கை தொடைக்கிற வேலை........

ஒரு மூணு மாசமா
என்ன மூச்சு திணற திணற
பொரட்டி பொரட்டி வேலை
வாங்கிட்டாங்கண்ணே ஆபீஸ்ல !!!
ஹவ்வவ்வ்வ்வ் .................
ண்ணே
ஏண்ணேஎனக்கு ஒரு சந்தேகம்ணே,
ஏரோப்லேன் பரந்த பத்தாதாண்ணே ..
அதோட ரெக்கைல ஒட்டி இருக்கிற
பனிகட்டிய தொடைக்கிறதுக்கு
ஒரு ஊரே உட்கார்ந்து யோசிச்சு
வேலை பாக்குராங்கண்ணே......

என்னை எவ்ளோ புழியணுமோ,
அவ்ளோ பண்ணிட்டாங்கன்னே .....

இருந்தாலும் நிறைய விஷயங்கள்
தெரிஞ்சிக்கிட்டேண்ணே ..........

நம்ம ஊருல இந்த ரெக்கை தொடைக்கிற
வேலை எல்லாம் தேவைப்படாது ....
அடிக்கிற வெயிலுல எப்படி பனி ரெக்கைல வரும் .....

சரிங்கண்ணே நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்
வரட்டா ?????????

Wednesday, January 27, 2010

மொக்க நேரங்கள் ..........

காலை 4 மணிக்கு
ரயிலை விட்டு இறங்கிய உடன்
ஒரு ( மொக்க ) ஜோக்
சொல்லி விட்டு நான்
மட்டும் விழுந்து விழுந்து சிரித்தேன்.
பக்கத்தில் நின்ற நண்பன்
சிரிக்கவே இல்லை.
" ஏன்டா என் காலை இப்படி
மிதிச்சுட்டு நின்னா எனக்கு எப்படிடா சிரிப்பு வரும்? காலை எடுடா "
முறைத்தபடி சொன்னான் ...
எனக்கு மறுபடியும்
சிரிப்பு வந்தது .....

Tuesday, January 5, 2010

வணக்கம்ங்கணா

எல்லாருக்கும் வணக்கம்ங்கணா ,

ரொம்ப நாலா , நக்கலா நச்சுன்னு ( !! ??? ) ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்னு
ஆசைங்கணா. என்னடா பேரு வைக்கலாம்னு யோசிக்கும் போது இந்த
பேரு நியாபகத்துல வந்துச்சு , உடனே ஆரம்புச்சுட்டோம்ல.

சரி உங்களுக்கு எல்லாம் இனி கஷ்ட காலம்தான் !!

இனி ஒவ்வொரு ஆணியாக புடுங்கலாம் !!!

-----------------------------------------------
யாராவது இனிமேல் நீ என்ன பெரிய புடுங்கியான்னு
கேட்டா நான் ஆமான்னு பதில் சொல்லலாம்ல .....
சரி சரி இப்பவே கடுப்பாகிராதீங்க .................
-----------------------------------------------